Home இந்தியா இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல்2ம்தேதி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்- ரஜினி,கமல் பங்கேற்பு

இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல்2ம்தேதி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்- ரஜினி,கமல் பங்கேற்பு

803
0
SHARE
Ad

rajini-n-kamalசென்னை, மார்ச்.25- நடிகர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது.

ஆனால் இந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை. அது நீர்த்துப் போன ஒன்று என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இலங்கை அரசைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல் 2ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

சென்னை தியாகாரயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.

உண்ணாவிரதத்தை யொட்டி வரும் 2ம் தேதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.