Home இந்தியா மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு!

மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு!

809
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரும் படி டிடிவி தினகரன் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஏற்கனவே நடப்பு முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணி, தினகரனை அதிமுக-வில் இருந்து விலக்கியிருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், தினகரனின் இந்த அறிவிப்பு குழப்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

இரட்டை இலை மீட்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், பிணையில் வெளிவந்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, அண்மையில் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தீவிர அரசியலில் இறங்கப்போவதாகத் தெரிவித்தார்.

அதன் படி, தற்போது ஆகஸ்ட் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பது அடுத்தக் கட்ட நகர்விற்குத் தயாராவதாகத் தெரிகின்றது.