Home இந்தியா அர்ஜூனா விருது: தமிழக வீரர் மாரியப்பன் பெயர் பரிந்துரை!

அர்ஜூனா விருது: தமிழக வீரர் மாரியப்பன் பெயர் பரிந்துரை!

781
0
SHARE
Ad

paralympic_goldசென்னை – தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு, ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான அர்ஜூனா விருதுக்கு பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சி.கே. தக்கர் தலைமையிலான குழு இந்தப் பரிந்துரைப் பட்டியலைத் தயாரித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அவற்றில், பாராலிம்பிக் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.