Home இந்தியா சந்தேக மரண வழக்கு: மாரியப்பன் பெயரைச் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு!

சந்தேக மரண வழக்கு: மாரியப்பன் பெயரைச் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு!

873
0
SHARE
Ad

Mariyappanசென்னை – சதீஷ்குமார் என்பவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில், தடகள வீரர் மாரியப்பனின் பெயரைச் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு, பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்றவர் தமிழகத் தடகள வீரர் மாரியப்பன்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு காரில் சென்று கொண்டிருந்த போது, சதீஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

#TamilSchoolmychoice

இதில் மாரியப்பனுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சில தினங்கள் கழித்து சதீஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்தேகமிருப்பதாகக் கூறி சதீஷ்குமாரின் தாயார் தொடுத்த வழக்கில் தற்போது மாரியப்பனின் பெயரையும் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.