Home இந்தியா இந்திய துணை அதிபர் தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது!

இந்திய துணை அதிபர் தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது!

1077
0
SHARE
Ad

Modiபுதுடெல்லி – இந்தியாவின் துணை அதிபருக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது.

மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில், மாநிலங்கள் அனைத்தில் இருந்தும் 790 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனது வாக்கைப் பதிவு செய்தார்.

#TamilSchoolmychoice

இந்த தேர்தலில் பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.

இன்று இரவு துணை அதிபருக்கான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.