Home நாடு முகமது ராவுஸ் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றார்!

முகமது ராவுஸ் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றார்!

754
0
SHARE
Ad

Md Raus Sharifகோலாலம்பூர் – அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் முகமது ராவுஸ் ஷாரிப் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த பதவி ஏற்பு விழாவில் சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக் கொண்டார்.

கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் சிங்காசனா கெச்சில் என்ற அறையில், பேரரசர் சுல்தான் முகமட் வி முன்னிலையில், தனக்கான நியமனப் பத்திரத்தை ராவுஸ் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான் சைட், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் சுல்கிப்ளி அகமட் மாகினுடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த ஆரிப்பின் சகாரியா தனது 66-வது வயதில் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்குப் பதிலாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, முகமது ராவுஸ் நாட்டின் 14-வது தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.