கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) பிற்பகல் 2.30 மணி தொடங்கி புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி உறுதி மொழியோடு மாமன்னர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், இன்றைய பதவியேற்பு சடங்கில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி கலந்து கொள்ள முடியவில்லை. கொவிட் தொற்று கண்ட ஒருவருடன் நெருக்கத்தில் இருந்த காரணத்தால், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் இஸ்மாயில் சாப்ரி. அதன் காரணமாகவே அவரால் இன்றைய பதவியேற்பு சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை.
கல்வி துணையமைச்சராக நியமனம் பெற்றிருக்கும் சபா கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அலாமினும் இந்த பதவியேற்பு சடங்கில் கொவிட் தொற்று காரணமாக கலந்து கொள்ளவில்லை.
வணிக முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் டான்ஶ்ரீ நோ ஓமாரும் பதவியேற்பு சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. கொவிட் தொற்று கண்ட ஒருவருடன் நெருக்கத்தில் இருந்த காரணத்தால் அவரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இன்றைய பதவியேற்பு சடங்கில் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:
படங்கள் : நன்றி : இஸ்தானா நெகாரா அதிகாரத்துவ முகநூல் பக்கம்
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal