கோலாலம்பூர் : சபா அரசியலில் அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மூசா அமானை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.
பக்காத்தான் கூட்டணி 2018-இல் ஆட்சிக்கு வந்ததும் மூசா அமான் மீது ஊழல் வழக்குகள் போடப்பட்டன. பின்னர் மொகிதின் யாசின் பிரதமரானதும் இந்த வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஷாபி அப்டாலின் ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டார் மூசா அமான். தனக்குப் பின்னால் போதுமான சட்டமன்ற உறுப்பினர்களை அணிவகுக்கச் செய்தார்.
அந்த முயற்சியை முறியடிக்க சபா சட்டமன்றத்தைக் கலைத்தார் ஷாபி அப்டால். தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார் ஷாபி அப்டால்.
அதன்பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார் மூசா அமான். தற்போது மூசா அமானின் மகன் யமானி ஹபிஸ் மூசா (Yamani Hafez Musa) சபா செபித்தாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
அவர் துணை நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.