Home நாடு அமைச்சரவை கொண்டு வரும் 7 சீர்திருத்தங்கள் என்ன?

அமைச்சரவை கொண்டு வரும் 7 சீர்திருத்தங்கள் என்ன?

678
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : 7 நாடாளுமன்ற, சட்ட, சீர்திருத்தங்களைக் கொண்டு வர இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அவை பின்வருமாறு:

1. முதலாவது, கட்சித் தாவலுக்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது

#TamilSchoolmychoice

2. இரண்டாவது, வாக்களிக்கும் வயதை 21-இலிருந்து 18-ஆகக் குறைக்கும் வகையில் மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது.


3. பிரதமர் பதவி வகிக்கும் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வருவது 3-வது சீர்திருத்தமாகும்.


4. நாடாளுமன்ற சிறப்பு செயற்குழுக்களில் எதிர்கட்சி உறுப்பினர்களும், அரசாங்க அமைச்சுப் பொறுப்புகள் வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களும் (backbenchers) சரி சம அளவிலான எண்ணிக்கையில் இடம் பெறுவதை உறுதி செய்வது. இது 4-வது சீர்திருத்தமாகும்.

5. எல்லா சட்டத் திருத்தங்களும், புதிய சட்டங்களும், முதலில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி தரப்பினரிடையே கலந்தாலோசிக்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்டு, அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இது 5-வது சீர்திருத்தமாகும்.

6. எதிர்கட்சி அரசியல்வாதிகள் தேசிய மீட்சித்
திட்டத்தில்இணைத்துக் கொள்ளப்பட்டு, மேம்படுத்துதலுக்காக அவர்கள் வழங்கும் கருத்துகளும் ஆலோசனைகளும், சேர்த்துக் கொள்ளப்படும். இது 6-வது சீர்திருத்தமாகக் கொண்டுவரப்படுகிறது.

7. எதிர்கட்சித் தலைவருக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளும் ஓர் அமைச்சருக்கு வழங்கப்படுவதற்கு நிகரானதாகத் திகழும். இது 7-வது சீர்திருத்தமாகும்.

இந்த 7 சீர்திருத்தங்களும் எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே திருத்தங்களாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal