Home நாடு அகமட் பைசால் அசுமு : அன்று பேராக் மந்திரி பெசார் – இன்று அமைச்சர்!

அகமட் பைசால் அசுமு : அன்று பேராக் மந்திரி பெசார் – இன்று அமைச்சர்!

540
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவையில் புதியவராக இணைபவர்களில் குறிப்பிடத்தக்க மற்றோர் அரசியல்வாதி முன்னாள் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு.

பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு. பேராக் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாராக இருந்து ஒரு கட்டத்தில் அந்தப் பதவியிலிருந்து அம்னோவால் வீழ்த்தப்பட்டவர்.

அவருக்கு பதிலாக அம்னோவின் டத்தோ சாரானி முகமட் பேராக் மந்திரி பெசாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது அந்தப் பதவியில் தொடர்ந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

பேராக் மாநிலத்தின் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அகமட் பைசால் அசுமு, இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவையில் இணையும் புதிய அமைச்சராவார். இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மொகிதின் யாசினின் பதவிக் காலத்தில் இறுதி நேரத்தில் அவரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் அகமட் பைசால் அசுமு. மொகிதின் பதவி விலகலைத் தொடர்ந்து அந்தப் பதவியிலிருந்து அவர் விலக நேர்ந்தது.

இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றவுடனேயே சில குழப்பமான அறிக்கைகள் விடுத்து இணையவாசிகளின் (நெட்டிசன்ஸ்) கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.

பெர்சாத்து கட்சியின் தலைவராக இருக்கும் மொகிதின் யாசின் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இதன் காரணமாக, பெர்சாத்துவின் துணைத் தலைவர் என்ற முறையில் அகமட் பைசால் அசுமு கட்சியின் பிரதிநிதிகளுக்குத் தலைமையேற்க வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal