கோலாலம்பூர்: ஆகஸ்டு 1- ஆம் தேதிக்குப் பிறகு அவசரகால நிலையைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்று மலாய் ஆட்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அரண்மனையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் மலாய் ஆட்சியாளர்கள் கலந்து கொண்டதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது.
“ஆகஸ்ட் 1- க்குப் பிறகு நாட்டை அவசரகால ஆட்சியின் கீழ் வைக்க வேண்டிய அவசியமில்லை,” என்று மலாய் ஆட்சியாளர்கள் கருதுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறைகல் மீண்டும் சமநிலையாக இயங்க வேண்டும், குறிப்பாக நிதி விஷயங்கள் மற்றும் தேசிய செலவினங்களில் மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம், ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்கிறார்கள்.
“அந்த மனப்பான்மையில், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு உத்தரவிட்ட மாமன்னரின் நிலைப்பாட்டிற்கு மலாய் ஆட்சியாளர்கள் இணங்க உள்ளனர்,” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.