Home இந்தியா ‘ராகுல் காந்தியைக் காணவில்லை’

‘ராகுல் காந்தியைக் காணவில்லை’

816
0
SHARE
Ad

Rahul Gandhiஅமேதி – காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகள் அவரது சொந்த தொகுதியான அமேதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அது பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்சிகளின் வேலை தான் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கடைசியாக ராகுல் காந்தி அந்தத் தொகுதிக்கு வந்ததாகவும், அதன் பின்னர், அத்தொகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

அதனால் ஆத்திரமடைந்திருக்கும் அமேதி தொகுதி மக்கள் ராகுலைக் கண்டித்து இப்பதாகைகளை ஒட்டியிருப்பதாகவும் நம்பப்படுகின்றது.