Home நாடு இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்குத் தனிக்குவளையா?

இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்குத் தனிக்குவளையா?

798
0
SHARE
Ad

Ululangatschoolissueகோலாலம்பூர் – உலு லங்காட்டில் உள்ள தேசியப் பள்ளி ஒன்றில், இஸ்லாம், இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கென, பள்ளி சிற்றுண்டிச்சாலையில், தனித்தனியாக தண்ணீர் குவளைகள் வைக்கப்பட்டிருந்ததாக பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் புகைப்படத்துடன் தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினர் அப்பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, பள்ளி நிர்வாகம் அதனை மறுத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக மாவட்டக் கல்வி இலாகா உறுதிப்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அச்சிற்றுண்டியை நிர்வகித்து வருபவரிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை என்னவென்பதைக் கண்டறிவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.