Home நாடு நஜிப்பையும், அவரது துணைவியாரையும் சோதனையிடுங்கள்: மகாதீர்

நஜிப்பையும், அவரது துணைவியாரையும் சோதனையிடுங்கள்: மகாதீர்

976
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவி டத்தின் ரோஸ்மா மான்சோர் ஆகியோரின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் என்பதையும் கடந்து நஜிப்பும், அவரது மருமகனையும் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டுமென மகாதீர் கேட்டுக் கொண்டார்.

“அவர்கள் எல்லோரையும் சோதனை செய்ய வேண்டும். உலகமே நஜிப்பின் பெயரைச் சொல்கிறது. ஆனால் அங்கு சோதனை இல்லை” என்று நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சில தினங்களுக்கு முன்பு, மகாதீரின் மகன்களின் அலுவலங்களில் ஐஆர்பி அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.