Home வணிகம்/தொழில் நுட்பம் அதிக முறை பாதியிலேயே திரும்பிய விமானம் எது தெரியுமா?

அதிக முறை பாதியிலேயே திரும்பிய விமானம் எது தெரியுமா?

1053
0
SHARE
Ad

Malaysia Airlinesகோலாலம்பூர் – கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை பளுது காரணத்தில் பாதி பயணத்திலேயே திரும்பிய மலேசிய விமானங்களில் மலிண்டோ ஏர் முன்னிலை வகிக்கின்றது.

இன்று வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில், ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து அமைச்சு வெளியிட்டிருக்கும் எழுப்பூர்வப் பதிலில், கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 2017-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வரையில் மலிண்டோ ஏர் விமானம் 20 முறை பாதியிலேயே திரும்பியிருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், 2015-ம் ஆண்டு, டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து 2016-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி வரை மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் 4 முறை பாதியிலேயே திரும்பியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அதேவேளையில், 2015, மார்ச் 10-ம் தேதியிலிருந்து 2017 ஜூலை 3-ம் தேதி வரையில், ஏர் ஆசியா விமானங்கள் 4 முறை பாதியிலேயே திரும்பியிருக்கின்றன என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்திருக்கிறது.