லங்காவி – ஷென்சென்னிலுருந்து லங்காவி செல்லும் ஏர் ஆசியா விமானம் தனது முதல் பயணத்தை 89 விழுக்காடு பயணிகளோடு, நேற்று வியாழக்கிழமை தொடங்கியது.
ஏகே1713 என்ற அந்த விமானத்திற்கு லங்காவி அனைத்துலக விமான நிலையத்தில், மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
லங்காவி மேம்பாட்டு அதிகார சபையின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஹாஜி அசிசான் நூர்டினும் விமான நிலையத்தில் அவ்விமானத்தை வரவேற்றார்.
வாரத்திற்கு மூன்று முறை இந்த நேரடி விமானச் சேவை வழங்கப்படவிருக்கிறது. லங்காவியில் இருந்து அனைத்துலக அளவில் பறக்கும் ஏர் ஆசியாவின் மூன்றாவது விமானம் இதுவாகும்.
இதனிடையே, இந்த விமான அறிமுகத்தை கொண்டாடும் விதத்தில், லங்காவியில் இருந்து ஷென்சென்னுக்கு ஒரு வழிப் பயணத்திற்கு சலுகை விலையாக 200 ரிங்கிட்டிலிருந்து டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சலுகை விலை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வரையில் இருக்கும் என ஏர் ஆசியா அறிவித்திருக்கிறது.
தற்போது சலுகை விலையில் முன்பதிவு செய்பவர்கள் வரும் 2018 பிப்ரவரி 8-ம் தேதி வரையிலான காலத்தில் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.