Home கலை உலகம் பிக் பாஸ்: நடிகர் சக்தி வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ்: நடிகர் சக்தி வெளியேற்றப்பட்டார்!

1234
0
SHARE
Ad

Sakthi-Vasu - big bossசென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மலேசிய நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மூன்று பேர் ஆபத்தான வரிசையில் இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

கவிஞர் சிநேகன், நடிகர் சக்தி, ஆரவ் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் கமல் தெரிவித்தார்.

இந்த முறை ரெய்சாவைத் தவிர்த்து எஞ்சிய அனைவரும் வெளியேற்றப்பட பிக் பாஸ் முன்மொழிந்திருந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் இரசிகர்களால் ஆரவ்வும் சிநேகனும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த கமல், தொடர்ந்து, வெளியேற்றப்படும் நபரின் பெயரைத் தாங்கிய உறையைத் திறந்து படித்து வெளியேற்றப்படுபவர் சக்தி எனத் தெரிவித்தார்.