இம்மாநாட்டில், முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளரும் ‘உத்தமம்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார் (Key note address).
16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, தொரண்டோ பல்கலைக் கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்தில் நடைபெறுகிறது. மலேசியாவிலிருந்து கணிசமான தொழில் நுட்ப, தமிழ் ஆர்வலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உத்தமம் மலேசியக் கிளையின் சார்பில் அதன் தலைவர் சி.ம.இளந்தமிழ் கனடா மாநாட்டுக்கு மலேசியக் குழு செல்வதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.