Home இந்தியா “நாங்கள் தயார், கமல் தயாரா?” – சீமான் கேள்வி!

“நாங்கள் தயார், கமல் தயாரா?” – சீமான் கேள்வி!

1037
0
SHARE
Ad

seemanசென்னை – பேரிடர்கள் மற்றும் ஊழலுக்காக மாநில முதல்வர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மற்ற மாநிலங்களில் மக்கள் கோரிக்கை விடுக்கும் போது, தமிழகத்தில் அது போன்ற சம்பவங்கள் நடந்தும் தமிழக முதல்வர் பழனிசாமியை மற்ற கட்சிகள் ராஜினாமா செய்ய கோரிக்கை வைக்காதது? என்று நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

கமலின் இந்தக் கருத்து முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்களை ஆத்திரமூட்டியதோடு, கமலுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கமலுடன் சேர்ந்து நாங்கள் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அவர் தயாராக இருக்கிறாரா? ஆனால் கமல் கூறுவது வெறும் பேச்சு மட்டும் தான்” என்று சீமான் தெரிவித்திருக்கிறார்.