ஷா ஆலாம், மார்ச் 25- எதிர்வரும் 13ஆம் பொதுத்தேர்தலில் மக்களின் ஜனநாயக கட்சியானது இஸ்லாமிய பாஸ் சின்னக் கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாக பாஸ் கட்சி பொதுச் செயலாளர் டத்தொ முஸ்தப்பா அலி தெரிவித்தார்.
“13ஆம் பொதுத்தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் சங்க பதிவகமானது மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலில் போட்டியிடாமல் தடுத்து வைப்பது முறையற்றச் செயல். அவ்வாறு சங்க பதிவகம் ஐ.செ.க கட்சியை தடுத்து வைத்தால் அப்பதிவகம் அரசியல் தொடர்பு கொண்டிருகிறது என பொருள்படும்” என்று அவர் கூறினார்.
ஐ.செ.க கட்சியை தடுத்து வைப்பது உண்மையானால், பாஸ் கட்சியானது ஐ.செ.க கட்சியின் வேட்பாளர்களை ஏற்றுக் கொண்டு அவர்களை பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட உதவி செய்யும்.
இது ஒன்றும் புதுமையான விஷயம் அல்ல. பாஸ் கட்சி ஏற்கனவே பாஸ் ஆதரவாளர்கள் குழுவின் சார்பில் வேட்பாளர்களை தேர்தலில் அமர்த்தியுள்ளது. எனவே, சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதைவிட, மக்கள் கூட்டணி கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடலாமே” என்று நேற்று செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.