Home 13வது பொதுத் தேர்தல் தம்பூன் தொகுதியில் அன்வார் போட்டியிடுவாரா?

தம்பூன் தொகுதியில் அன்வார் போட்டியிடுவாரா?

698
0
SHARE
Ad

slider copyபாகான் செராய், மார்ச்25- லுமூட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பேராக் மாநிலத்தின்  பாஸ் இளைஞர்கள் கட்சி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மக்கள் கூட்டணி தலைவர்கள் அன்வாரை தம்பூன் நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிடுமாறு  கேட்டுக் கொண்டுள்ளனர்.

அன்வாரை, தம்பூன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக் கொள்வதற்கான முக்கியமான  காரணம், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள்  பெரும்பாலும் பட்டணவாசிகளாகவும், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களாகவும் இருப்பதனால் ஆகும் என்று மக்கள் கூட்டணி தரப்பு தெரிவிக்கிறது.

அப்படியே அன்வார் இங்கு போட்டியிட்டால், அன்வாருக்கும்  2ஆம் நிதி அமைச்சரான டத்தோஸ்ரீ அமாட் உஸ்னிக்கும்   கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் அமாட் ஹூஸ்னி சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவார் பேராக் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்றினால் அவர் அடுத்த மந்திரிபு சாராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

husniஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரின் கேலாங் பாத்தா தொகுதியில் போட்டியிடுவதாக திடீரென அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவ்வாறே அன்வாரும் தம்பூன் நாடாளுமன்றத்தில் போட்டியிடுவதாக திடீர் அறிவிப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில், அமாட் உஸ்னி 5,386  வாக்குகள் வித்தியாசத்தில் பி.கே.ஆர் கட்சியைச் சார்ந்த முகமட் அஸ்ரி ஒஸ்மானை தோற்கடித்தார் என்பது குறிபிடத்தக்கது.

மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் தங்களின் வியூகத்தின் ஒரு பகுதியாக தேசிய முன்னணி கைவசம் உள்ள 50 சதவீதமே வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் மக்கள் கூட்டணியின் பிரபலமான தலைவர்களை நிறுத்துவதன் மூலம் அதிகமான நாடாளுமன்ற இடங்களை வெல்ல மக்கள் கூட்டணி திட்டம் வகுத்துள்ளது.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் லிம் கிட் சியாங் கேலாங் பாத்தா தொகுதியில் நிறுத்தப்படுவதும்!