இக்கண்காட்சி நேற்று திங்கட்கிழமை மாலை மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி, தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன், டத்தின்ஸ்ரீ உத்தாமா டாக்டர் இந்திராணி சாமிவேலு, தமிழகத்தைச் சேர்ந்த பாபுஜி சுவாமி, மலாயா பல்கலைக்கழகத் துணைபதிவதிகாரி புண்ணியமூர்த்தி ஆகியோரால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (MICAS) தலைவர் எஸ்.பி.மணிவாசகம் தலைமையிலான தொண்டார்வளர் குழு,இதனை ஏற்பாடு செய்திருக்கிறது.
இக்கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் எம்ஜிஆரின் சிறப்புப் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்.