Home உலகம் ஹாங்காங் துணையமைச்சர் மகன் அடுக்குமாடியிலிருந்து குதித்து மரணம்!

ஹாங்காங் துணையமைச்சர் மகன் அடுக்குமாடியிலிருந்து குதித்து மரணம்!

782
0
SHARE
Ad

Honghongdeputyeducationministersondeadஹாங் காங் – ஹாங்காங் துணைக் கல்வியமைச்சரின் 25 வயதான மகன் இன்று வியாழக்கிழமை யோவ் மா தேய் என்ற பகுதியில் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து மரணமடைந்தார்.

அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 9-வது தளத்தில், தனது வெளிநாட்டு உதவியாளருடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், இன்று காலை வீட்டின் வரவேற்பரையின் ஜன்னல் வழியாக குதிக்க முயற்சி செய்த போது உதவியாளர் தடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், தனது படுக்கறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்ட அவர், அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.