Home இந்தியா “நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்” – ஆளுநரிடம் தினகரன் கோரிக்கை

“நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்” – ஆளுநரிடம் தினகரன் கோரிக்கை

784
0
SHARE
Ad

dinakaran-ttv-feature-1சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 4.30 மணி நிலவரம்)

இன்று பிற்பகலில் சென்னையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், அதன் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆளுநரைச் சந்தித்த பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தினகரன், ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.