Home கலை உலகம் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் கதறுவது ஏன்?

பிக்பாஸ் வீட்டில் அனைவரும் கதறுவது ஏன்?

1051
0
SHARE
Ad

SnehanBigbossசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள், தங்களின் 100 நாட்கள் இலக்கில் 74 நாட்களைத் தொட்டுவிட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் விளம்பர முன்னோட்டத்தில், போட்டியாளர்கள் அனைவரும் அழுது கதறுவது போல் காட்கள் உள்ளன.

கவிஞர் சினேகனின் தம்பியைப் போல் தோற்றமளிக்கும் ஒருவர், போட்டியாளர்களுடன் சேர்ந்து அழுகிறார்.

மேலும், கவிஞர் சினேகன் “ஐயா” என்று அழுது கதறுகிறார். பின்புலமாக “தெய்வங்கள் எல்லாம்” என்ற பாடலும் ஒலிக்கிறது.

#TamilSchoolmychoice

பல வருடங்களாக தனது குடும்பத்தைப் பார்க்காமல் இருந்த சினேகன், அவர்களை பிக்பாஸ் வீட்டில் சந்தித்ததால் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறாரா? அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதா? என்பது தெரியவில்லை.

என்றாலும், அக்காட்சி காண்பவர்களைக் கண்கலங்க வைக்கிறது.

அது குறித்து விவரம் இன்று இரவு தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரியவரும்.