கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கியதை இரத்து செய்து, அவரை மலேசியாவிற்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி 17 அமைப்புகள் இணைந்து வழக்குத் தொடுத்தன.
இந்நிலையில், அவ்வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அரசாங்கம் சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து 17 பேர் சார்பில் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகேசன் கூறுகையில், தமது கட்சிக்காரர்கள் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்த இந்த மனுவிற்கு, கடந்த புதன்கிழமை கடைசி நிமிடத்தில் அரசாங்கம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை நீதிபதி அஜிஸ் நவாவி வரும் செப்டம்பர் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.