வாஷிங்டன் – அமெரிக்கா, மலேசியா இடையிலான 60 ஆண்டுகால நட்புறவைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் படி, நேற்று திங்கட்கிழமை, நஜிப் தனது துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோருடன், அமெரிக்காவைச் சென்றடைந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை, டொனால்ட் டிரம்புடன், நஜிப் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதில் அமெரிக்கா – மலேசியா இடையிலான வர்த்தக உறவுகள், ரோஹின்யா விவகாரம், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து டிரம்புடன், நஜிப் கலந்தாலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படம்: மலேசியப் பிரதமர் அலுவலகம் டுவிட்டர்