Home நாடு ‘உங்களது எதிரி எங்களுக்கும் எதிரி தான்’ – டிரம்புக்கு நஜிப் உறுதி!

‘உங்களது எதிரி எங்களுக்கும் எதிரி தான்’ – டிரம்புக்கு நஜிப் உறுதி!

929
0
SHARE
Ad

Najib-வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அமெரிக்காவின் எதிரி மலேசியாவுக்கும் எதிரி தான் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமின் பெயரில் தீவிரவாதம் செய்பவர்களை ஒடுக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு வருவதற்குப் பக்கபலமாக மலேசியாவும் இருக்கும் என்றும் நஜிப் குறிப்பிட்டிருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி ஹில்’ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

“மலேசியாவில் இதுவரை ஒரே ஒரு டாயிஸ் தொடர்புடைய தாக்குதல் தான் நடந்திருக்கிறது (நல்லவேளையாக எந்த ஒரு மரணமும் நிகழவில்லை. ஆனால் அந்த முயற்சி கூட நடந்திருக்கக் கூடாது”

#TamilSchoolmychoice

மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து நிந்தனை செய்து கொண்டிருப்பவர்களும், அழிவுகளை ஏற்படுத்த நினைப்பவர்களும் உங்களுக்கு எதிரி போல், எங்களுக்கும் அவர்கள் எதிரி தான் என்றும் நஜிப் தெரிவித்திருக்கிறார்.