Home நாடு தைப்பிங்கில் கைக்குழந்தையோடு ரோஹின்யா குடியேறிகள் கைது!

தைப்பிங்கில் கைக்குழந்தையோடு ரோஹின்யா குடியேறிகள் கைது!

878
0
SHARE
Ad

Rohingyadetainedattaipingதைப்பிங் – பேராக் மாநிலம் தைப்பிங்கில், நேற்று திங்கட்கிழமை இரவு மாநில குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், முறையான அனுமதி ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 45 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் 1 மாதக் கைக்குழந்தையுடன் ரோஹின்யா குடியேறிகளும் இருப்பதாக குடிநுழைவு இயக்குநர் முஸ்தாபர் அலி தெரிவித்திருக்கிறார்.

159 வெளிநாட்டினரைச் சோதனையிட்டதில், 45 பேரிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்றும், அவர்களில் 39 பேர் ஆண்கள், 6 பெண்கள் என்றும் முஸ்தாபர் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவர்கள் அனைவரும் இந்தோனிசியா, வங்காள தேசம், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் முஸ்தாபர் தெரிவித்திருக்கிறார்.