Home நாடு சமயப்பள்ளி தீவிபத்து: டாக்டர் சுப்ரா பொது மருத்துவமனைக்கு நேரில் வருகை

சமயப்பள்ளி தீவிபத்து: டாக்டர் சுப்ரா பொது மருத்துவமனைக்கு நேரில் வருகை

915
0
SHARE
Ad

subra-dr-visit-HKL-fire victims-14092017 (1)இன்று வியாழக்கிழமை அதிகாலை கோலாலம்பூரிலுள்ள கம்போங் டத்தோ கிராமாட் பகுதியிலுள்ள இஸ்லாமியச் சமயப் பள்ளியில் நிகழ்ந்த தீவிபத்தைத் தொடர்ந்து, அந்த விபத்தில் பாதிப்படைந்தவர்களை நேரில் கண்டு நலம் விசாரிக்க சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்தார்.

subra-dr-visit-HKL-fire victims-14092017 (3)கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் தீவிபத்து தொடர்பாக வழங்கப்பட்ட விளக்கங்களையும் டாக்டர் சுப்ரா நேரில் கேட்டறிந்து நிலைமை குறித்து தெரிந்து கொண்டார்.

முன்னதாக இந்த தீவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் டாக்டர் சுப்ரா பத்திரிக்கை அறிக்கை ஒன்றின்வழி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.subra-dr-visit-HKL-fire victims-14092017 (4)