சியோல் – ஐ.நா எச்சரிக்கை விடுத்தும், உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும் கூட, தன்னை மாற்றிக் கொள்ளாத வடகொரியா, இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறது.
இன்று காலை பியோங்யாங்கிலிருந்து வீசப்பட்ட அந்த தொலைதூர ஏவுகணை, ஜப்பான் நாட்டின் வழியாகச் சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கிறது.
ஏவுகணை விழுந்த இடம், ஜப்பானின் ஹைக்கைடோ பகுதியிலிருந்து கிழக்கே 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசிபிக் கடல் பகுதி என ஜப்பான் அமைச்சரவைச் செயலாளர் யோசிஹைட் சுகா ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தான், வடகொரியா, மிகவும் சக்தி வாய்ந்த அணுகுண்டுச் சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.