Home நாடு சமயப்பள்ளி தீ விபத்து: மூன்று மகன்களையும் பறிகொடுத்த தாய்!

சமயப்பள்ளி தீ விபத்து: மூன்று மகன்களையும் பறிகொடுத்த தாய்!

778
0
SHARE
Ad

tahfizfireகோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் இஸ்லாம் சமயப்பள்ளியில் நடந்த தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இக்கோரச் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகக் கோரமான தீவிபத்தாக இச்சம்பவம் கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இச்சம்பவத்தில் தனது 3 மகன்களையும் ஒரே நேரத்தில் இழந்துவிட்ட தாய் ஒருவர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

மசாவானி முகமது சாஹித் என்ற அந்த 29 வயதான விதவைத் தாய் பேச முடியாத அளவிற்கு ஆழ்ந்த துயரத்தில் இருந்த நிலையில், அவரது உறவினர் ஒருவர் ஊடகங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது கணவரை இழந்திருக்கிறார் மசாவானி.

இதனிடையே, மலேசியாவுக்கு இது ஓரு சோகமான நாள் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டிருக்கின்றார்.

Photo: The Star