Home Photo News மோடி ஆடையில் கலக்கிய ஷின்சோ அபே – இந்திய வருகை (படக் காட்சிகள்)

மோடி ஆடையில் கலக்கிய ஷின்சோ அபே – இந்திய வருகை (படக் காட்சிகள்)

1075
0
SHARE
Ad

shinzo abe-india visit-modi-13092017 (14)அகமதாபாத் – குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதபாத் – மும்பை இடையிலான புல்லட் எனப்படும் அதிவிரைவு இரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், இந்தியா-ஜப்பான் இடையிலான உச்சநிலை சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், கடந்த புதன்கிழமை (13 செப்டம்பர்) இந்தியாவுக்கு வருகை மேற்கொண்ட ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, மோடி பாணியிலான குர்தா ஆடையில் வலம் வந்து கலக்கினார்.

ஷின்சோ அபேயின் துணைவியார் பஞ்சாபி பாணியிலான சல்வார் கம்மீஸ் அணிந்து அபேயுடன் உலா வந்தார்.

ஷின்சோ அபேயின் இந்திய வருகை குறித்த படக் காட்சிகள்:-

#TamilSchoolmychoice

shinzo abe-india visit-modi-13092017 (3)அகமதாபாத் வந்தடைந்த அபேயை வரவேற்கிறார் நரேந்திர மோடி…

shinzo abe-india visit-modi-13092017 (5)கட்டியணைத்து அபேயை வரவேற்கும் மோடி…

shinzo abe-india visit-modi-13092017 (4)ஜப்பானியப் பிரதமருக்கு மரியாதை அணிவகுப்பு நல்கப்படுகிறது…

shinzo abe-india visit-modi-13092017 (6)அகமதாபாத் நகரில் வீதிகளில், திறந்த ஜீப் வாகனத்தில் இருந்தபடி உலா வந்த அபேயும், மோடியும்…

shinzo abe-india visit-modi-13092017 (7)shinzo abe-india visit-modi-13092017 (9)வரவேற்புப் பதாகையின் பின்னணியில் வீதிகளில் நின்று ஜப்பானியப் பிரதமருக்கும், மோடிக்கும் வரவேற்பு வழங்கும் அகமதாபாத் பொதுமக்கள்…

shinzo abe-india visit-modi-13092017 (8)இந்திய பாரம்பரியத்துக்கே உரித்தான அலங்காரங்களுடன் இந்தியக் கொடியேந்தி வரவேற்கும் மக்கள்

shinzo abe-india visit-modi-13092017 (10)மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த ஷின்சோ அபே – காந்தியின் சிலைக்கு மோடியுடன் மரியாதை செலுத்துகிறார்.

shinzo abe-india visit-modi-13092017 (11)சபர்மதி ஆசிரமத்தில் காந்தி தங்கியிருந்த அறை – அவர் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிடுகின்றனர்…

shinzo abe-india visit-modi-13092017 (12)காந்தியின் புகழ்பெற்ற தத்துவத்தை விளக்கும் மூன்று குரங்குகள் சிலையைப் பார்வையிடுகின்றனர்.

shinzo abe-india visit-modi-13092017 (13)சபர்மதி ஆசிரமத்தில் – ஆற்றங்கரையோரத்தில் இரு பிரதமர்களின் ஒரு நினைவுப் புகைப்படம்

shinzo abe-india visit-modi-13092017 (14)அகமதாபாத் நகரில் 16-ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட பழம் பெரும் சித்தி சையிட் நி ஜாலி (Sidi Saiyyid Ni Jaali) பள்ளிவாசலை ஷின்சோ அபேக்குச் சுற்றிக் காட்டும் மோடி

shinzo abe-india visit-modi-13092017 (1)shinzo abe-india visit-modi-13092017 (2)படங்கள்: நன்றி – நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்