Home நாடு மகாதீரிடம் ஆர்சிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்!

மகாதீரிடம் ஆர்சிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்!

1087
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – பேங்க் நெகாராவின் அந்நியச் செலவாணி நஷ்டம் குறித்து விசாரணை செய்வதற்காக அரச விசாரணை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 4 காவல்துறை அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் சாட்சி வாக்குமூலம் பெற்றனர்.

வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் வரும் திங்கட்கிழமைக்குள் விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதனை அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் மகாதீர் தெரிவித்தார்.