Home உலகம் இலண்டன் பயங்கரவாதம்: 22 பேர் காயம்

இலண்டன் பயங்கரவாதம்: 22 பேர் காயம்

989
0
SHARE
Ad

london-parsons-station-attack-15092017 (1)இலண்டன் – (மலேசிய நேரம் இரவு 8.30 மணி நிலவரம்) இங்குள்ள பார்சன்ஸ் இரயில் நிலையத்தில் இரயில் வண்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து இலண்டன் முழுமையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பிலான ஆகக் கடைசியான தகவல்கள் வருமாறு:

  • இரயில் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டதில் 22 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர்.

london-parsons-station-attack-15092017 (2)இலண்டன் காவல் துறையின் சார்பில் பார்சன்ஸ் குண்டுவெடிப்பு குறித்து விளக்கமளிக்கும் காவல் துறை அதிகாரி

  • வெடிகுண்டை வெடிக்கச் செய்யப் பயன்படுத்தப்பட்ட, நேர இயக்கு கருவி பொருத்தப்பட்ட சாதனைம் ஒன்றையும் இலண்டன் காவல் துறையினர் கண்டெடுத்தனர்.
  • இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவனைக் கண்டுபிடிக்கும் பணியில் இலண்டன் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
  • பார்சன்ஸ் தாக்குதல் குறித்து இலண்டன் மாநகரத் தலைவர் (மேயர்) சாதிக் கான் வெளியிட்ட அறிக்கையில் இலண்டன் இதுபோன்ற தாக்குதல்களால் பயந்து விடாது, தோல்வியடையாது என வலியுறுத்தியுள்ளார்.
#TamilSchoolmychoice

london-parsons-station-attack-15092017 (3)பார்சன்ஸ் இரயில் நிலைய நுழைவாயிலில் அணிவகுத்து நிற்கும் காவல் துறை, தீயணைப்புத் துறை வாகனங்கள். சம்பவம் நடந்த மூன்று நிமிடங்களில் அந்த இடத்தை அடைந்ததாகவும் இலண்டன் தீயணைப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.