Home நாடு பிற்பகலில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் நஜிப்!

பிற்பகலில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் நஜிப்!

683
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருக்கிறார்.

நேற்று சனிக்கிழமை இரவு, அம்னோ தலைவர்கள் அனைவருக்கும், அம்னோ பொதுச்செயலாளரிடமிருந்து விடுக்கப்பட்ட திடீர் அழைப்பினைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இன்று பிற்பகல் 4.45 மணியளவில் அம்னோ தலைமையகத்தில் இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

இதனிடையே, நஜிப்பின் இந்த திடீர் செய்தியாளர் சந்திப்பு பல ஆரூடங்களை எழுப்பியிருக்கிறது.

நஜிப் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகச் செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.