Home நாடு பீர் திருவிழாவுக்கு டிபிகேஎல் அனுமதி மறுப்பு: பாஸ் பாராட்டு!

பீர் திருவிழாவுக்கு டிபிகேஎல் அனுமதி மறுப்பு: பாஸ் பாராட்டு!

814
0
SHARE
Ad

beerகோலாலம்பூர் -வரும் அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதி, கோலாலம்பூரில் நடைபெறவிருந்த பீர் திருவிழா 2017-க்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

டிபிகேஎல்-ன் இந்த அறிவிப்பிற்கு பாஸ் கட்சியின் இறையாண்மை தகவல் பிரிவுத் தலைவர் முகமது கைருடின் அமான் ரசாலி பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, இந்த பீர் திருவிழாவின் ஏற்பாட்டு நிறுவனமான மைபீர் (எம்) செண்ட்ரியான் பெர்ஹாட், டிபிகேஎல் அனுமதிக்க மறுத்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

மலேசியாவில் முதன் முதலாக கடந்த 2012-ம் ஆண்டு, புக்கிட் பிந்தாங்கில் பீர் திருவிழா நடைபெற்றது. அதில் 200 பேர் கலந்து கொண்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு, பப்ளிக்கா ஷாப்பிங் கேலரியில் நடைபெற்ற பீர் திருவிழாவில் 3,500 பேர் கலந்து கொண்டு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பீரைச் சுவைத்தனர்.

இந்த ஆண்டும் நடைபெறவிருந்த திருவிழாவில் 6,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.