இந்நிலையில், அதனை எதிர்த்து திமுக வழக்குத் தொடர்ந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு வரும் அக்டோபர் 12-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, எந்த நேரத்திலும் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பதை உணர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) , இன்று புதன்கிழமை மொத்தமாக அனைவரும் ராஜினாமா செய்து சட்டமன்றத்தைக் கலைக்கும் நெருக்கடியை ஆளுநருக்கு ஏற்படுத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து செயல் தலைவர் ஸ்டாலின் கட்சி உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவான 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நேற்று செவ்வாய்க்கிழமை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.