Home நாடு “அன்வார் நிலைமை சீராக உள்ளது” – வான் அசிசா அறிக்கை

“அன்வார் நிலைமை சீராக உள்ளது” – வான் அசிசா அறிக்கை

917
0
SHARE
Ad

anwar-ibrahim-prayersகோலாலம்பூர் – உயர் இரத்த அழுத்தம் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது துணைவியாரும் பக்காத்தான் ஹரப்பான் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் தொடர்ந்து திட்டமிட்ட சிகிச்சை பெறுவதற்காக அன்வார் அடுத்த சில நாட்களுக்கு அடிக்கடி மருத்துவமனைக்கு வரவேண்டி இருக்கும் என்றும் வான் அசிசா தெரிவித்திருக்கிறார்.

அன்வாரின் உடல் நலம் குறித்து அக்கறையோடு விசாரித்தவர்களுக்கும், அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கும், அவருக்கு சிகிச்சை வழங்கி வரும் மருத்துவர்களுக்கும் வான் அசிசா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

Wan-Azizah1-300x199“மாற்றம் என்பது நடக்கக் கூடிய சாத்தியம்தான் என நேற்று அன்வார் கூறியிருந்ததை நினைவுபடுத்திய வான் அசிசா, 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் வெல்வார்கள் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

அன்வார் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காகவும், பரிசோதனைகளுக்காகவும் இருந்து வருவார் என்றும் அவர் நிபுணத்துவம் வாய்ந்த சிறந்த மருத்துவர்களினால் கவனிக்கப்படுகிறார் என்றும் கோலாலம்பூர் பொது மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், “மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் பாடுபடவேண்டும். மாற்றம் என்பது விரைவில் நிகழக் கூடிய சாத்தியம் தென்படுகிறது” என்று கூறினார்.

இதற்கிடையில் அன்வாரின் துணைவியார் டாக்டர் வான் அசிசாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரைச் சென்று சந்திக்க சிறை அதிகாரிகள் அன்வாருக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு அன்வார் தனது துணைவியாரை மருத்துவமனையில் சுமார் 45 நிமிடங்கள் சந்தித்தார்.