Home இந்தியா சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்!

சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்!

925
0
SHARE
Ad

sasikala-natarajanசென்னை – சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விகே.சசிகலாவின் கணவர் நடராஜனின் (வயது 74) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சைப் பெற்று வரும் தனியார் மருத்துவமனை இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறது.

கல்லீரல் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நடராஜனின் சிறுநீரகங்களும், நுரையீரலும் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், இது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை கூறுகின்றது.