Home நாடு தமிழக முதல்வரைச் சந்தித்த சிலாங்கூர் மந்திரி பெசார்!

தமிழக முதல்வரைச் சந்தித்த சிலாங்கூர் மந்திரி பெசார்!

865
0
SHARE
Ad

Azmin ali - palanisamymeetup2592017சென்னை – அதிகாரப்பூர்வப் பயணமாகத் தமிழகத்திற்குச் சென்றிருக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, சென்னையில் இன்று திங்கட்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார்.

அச்சந்திப்பின் போது, தமிழகத்திற்கும், மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்திற்கும் இடையிலான சுற்றுலாத்துறையை வளப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

Azminali-palanisamymeetup2592017(a)இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் அஸ்மின் அலி, தமிழகம் – சிலாங்கூர் இடையிலான சுற்றுலாத்துறையை வளப்படுத்தும் பேச்சுவார்த்தைள் சுமூகமாகச் சென்றன. குறிப்பாக உயிரியல் தொழில்நுட்பம் குறித்தப் பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அஸ்மின் அலியுடன் ஸ்ரீ அண்டலாஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமாரும் உடன் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: அஸ்மின் அலி டுவிட்டர்