Home நாடு ‘நான் சிறை செல்லத் தயார்’ – தியான் சுவா பதில்!

‘நான் சிறை செல்லத் தயார்’ – தியான் சுவா பதில்!

1051
0
SHARE
Ad

Tian Chuaகோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரும், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தியான் சுவா மீதான காவல் துறையின் வழக்கொன்று இன்று வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு விசாரணைக்கு வருகின்றது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் தியான் சுவா, “கவலைப்படத் தேவையில்லை. நான் சிறையில் அடைக்கப்படுவேன் என்று நினைக்கிறேன். எனவே சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்” என்று மலேசியாகினியிடம் தெரிவித்திருக்கிறார்.

2012-ஆம் ஆண்டில் பெர்சே-3 பேரணியில் பங்கேற்ற அவர் காவல் துறையின் பயிற்சி மையத்தின் வளாகத்திலிருந்து அகன்று விடுமாறு, காவல் துறை விடுத்த உத்தரவை மீறிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத்தண்டனையும், 1,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice