Home நாடு மலாக்காவில் விஷவாயுக் கசிவு: 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மலாக்காவில் விஷவாயுக் கசிவு: 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

903
0
SHARE
Ad

Breaking-News3மலாக்கா – கம்புங் தம்பா பாயா பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 5 மணி வரை ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து மலாக்கா பேரிடர் நிர்வாகக் குழுச் செயலாளர் லெப்டினன்ட் கால்னல் எஃபெண்டி அலி கூறுகையில், 50 பேரில் 32 பேர் மலாக்கா மருத்துவமனையிலும், மீதம் 18 பேர் ஜாசின் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

பீப்பாய் ஒன்றில் இருந்த குளோரின் வாயு காற்றில் பரவி 1 கிலோமீட்டர் பரப்பளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், நேற்று மாலை 6 மணியளவில் அது போல் 10 பீப்பாய்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice