Home கலை உலகம் சினிமாவில் நடிப்பதை குறைத்துகொள்வேன் : அசின் திடீர் முடிவு

சினிமாவில் நடிப்பதை குறைத்துகொள்வேன் : அசின் திடீர் முடிவு

631
0
SHARE
Ad

Kollywood-news-5903சென்னை, மார்ச் 25- ‘நடிப்பு பற்றி தெளிவான முடிவுக்கு வந்துவிட்டேன். இனி நடிப்பதை குறைத்துக்கொள்வேன்‘ என்றார் நடிகை அசின்.

தமிழ்ப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அசின், ‘கஜினி‘ படம் மூலம் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதுவரை அவர் நடித்த 6 இந்தி படங்களில் 5 படங்கள் ஒவ்வொன்றும் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

27 வயதாகும் அசின் பற்றி பாலிவுட் பத்திரிகைகள் குறிப்பிடும்போது, ‘100 கோடி வசூல் ராணி’ என புகழ்கின்றன. இந்நிலையில் அமெரிக்க தொழில் அதிபரை அசின் மணக்கப்போவதாக தகவல் வெளியானது.

#TamilSchoolmychoice

இதற்கு அவர் மறுப்பு சொல்லி இருந்தார். நடிப்பு பற்றி அசின் நேற்று கூறும்போது, ‘இனிமேல் படங்களில் நான் நடிப்பதுபற்றி தெளிவான முடிவு எடுத்திருக்கிறேன். இந்த ஆண்டு குறைவான படங்களையே ஒப்புக்கொள்வேன். பாக்ஸ் ஆபிஸ் ஹிட், 100 கோடி வசூல் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டேன். எனவே அடுத்தகட்டமாக எனது நடிப்பு விஷயத்தில் இன்னும் முன்னேற்றமான மாற்றங்களை செய்திருக்கிறேன். இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் மட்டுமே ஒப்புக்கொள்வேன். இப்படியொரு முடிவு எடுப்பதற்கு இதுதான் சரியான தருணம். ஏனென்றால் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் என்னிடம் உள்ளது’ என்றார்.