Home கலை உலகம் திருமணம் பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை : நயன்தாரா விரக்தி

திருமணம் பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை : நயன்தாரா விரக்தி

654
0
SHARE
Ad

indexமார்ச் 25 – ‘திருமணம் செய்வது பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை‘ என்கிறார் நயன்தாரா. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

இருவரும் தொடர்பில் இருந்த நேரத்தில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதைகூட தவிர்த்தார். தற்போது நடிக்கும் படங்களில் அதுபோல் எந்த கண்டிஷனும் போடாமல் கால்ஷீட்டுக்கு ஓகே சொல்கிறார்.

தற்போது அஜீத், ஆர்யா, உதயநிதி ஆகியோருடன் படங்களில் நடித்து வருகிறார். ஆர்யாவுடன் நயன்தாரா நெருக்கமாக பழகுவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஆனால் ஆர்யா,‘ எங்களுக்குள் நட்பு தவிர வேறு எந்த உறவும் இல்லை‘ என்று கூறி உள்ளார். இந்நிலையில் நயன்தாராவிடம் திருமணம் பற்றி  கேட்டபோது, ‘திருமணத்தை பற்றி நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நிறைய நடந்துவிட்டன‘ என்றார்.

நயன்தாரா தற்போது தத்துவமாக பேசுவதுடன் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். எதிர்காலத்தில் நடிப்பு மற்றும் சொந்த வாழ்க்கை எப்படி அமையப்போகிறது என்பது பற்றி எந்த சிந்தனையும் தனக்கு இல்லை என விரக்தியுடன் உடனிருப்பவர்களிடம் கூறியுள்ளாராம்.