
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட முயற்சிகள் நடந்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எழும்பூர் கென்னத்லேன் பகுதியில் உள்ள புத்த மடத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சுற்றுலா வந்த புத்த துறவிகளும் தாக்கப்பட்டனர். சிங்களர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுச் செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்றும் திட்டம் இல்லை. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தால் துணை தூதரகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டியது இருக்கும்.