கோலாலம்பூர், மார்ச் 25- மலேசிய நாட்டின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான செந்தூல் நகரத்தார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் 108ஆவது பங்குனி உத்திர திருவிழா, நாளை செவ்வாய்க்கிழமை மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
காலை மணி 9.30 தொடங்கி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் ஸ்ரீ தண்டாயுதபாணி பெருமானுக்கு மஹேஸ்வர பூஜையும் கோலாகலமாக நிகழவுள்ளது.
இதைத் தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் புரிவார்.
தண்டாயுதபாணி பெருமான் பல்லாயிரக்கான பக்தர்கள் புடைசூழ பக்தி பாடல்கள் ஒலிக்க கோலாலம்பூர் வீதிகளில் உலா வந்து மறுபடியும் லெபோ அம்பாங்கிற்கு திரும்புவார்.
இத்திருவிழாவிற்கு பொது மக்கள் தங்கள் குடும்ப சகிதமாக வருகை தருவதோடு, ஸ்ரீதண்டாயுதபாணி பெருமானை வணங்கி நல்லாசி பெறுமாறு ஆலயத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.