Home அரசியல் சுலு சுல்தான் சகோதரருடன் நஜிப் சந்திப்பு? – விசாரிக்கப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்தல்

சுலு சுல்தான் சகோதரருடன் நஜிப் சந்திப்பு? – விசாரிக்கப்பட வேண்டும் – அன்வார் வலியுறுத்தல்

542
0
SHARE
Ad

2கோலாலம்பூர், மார்ச் 25- சுலு சுல்தான் என்று கூறிக் கொள்ளும் இஸ்மயில் கிராம் என்பவரின் சகோதர் என நம்பப்படும் இஸ்மாயில்  கிராம் என்பவருடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் அரசியல் செயலாளருமான ஹாஜி சம்சுடின் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து அரசாங்கம் விசாரிக்க வேண்டும என்று அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பி.கே.ஆர். கட்சிகளின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில்   ஜமாலுல் கிராம், பிரதமர், ஹாஜி சம்சுடின் ஆகியோர் இருக்கின்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்துரைத்த அன்வார் இப்ராஹிம் அனைத்து நேரங்களிலும், அனைத்து செயல்களிலும எதிர்க்கட்சியினரை குறை கூறுவதை விட்டு அரசாங்க அமைப்புகள் இந்த சந்திப்பு கூட்டம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

ஹாஜி சம்சுடின் முன்னாள் பிரதமர் மகாதீரின் அரசியல் செயலாளராக இருந்ததோடு அமைச்சர் பதவியையும் வகித்துள்ளார். சபா அடையாள  அட்டை பிரச்சினையில் ஹாஜி சம்சுடின் நேரடியாக சம்பந்தப்பட்டவர் என்பது சபா அடையாள அட்டை குறித்த அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையின் போது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.