Home Video கார்த்தி நடிப்பில் “தீரன் அதிகாரம் ஒன்று” – முன்னோட்டம்

கார்த்தி நடிப்பில் “தீரன் அதிகாரம் ஒன்று” – முன்னோட்டம்

1149
0
SHARE
Ad

Theeran Athigaram 1 -posterசென்னை – மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில், ராகுல் பிரித் கதாநாயகியாக நடிக்க, வினோத் இயக்கத்தில் விரைவில் வெளிவரப்போகும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

“சதுரங்க வேட்டை” படத்தை இயக்கி தமிழ்த் திரைப்பட உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த வினோத்தின் அடுத்த படம் என்பதாலும் எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கிறது.

#TamilSchoolmychoice

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கான இசையமைப்பை ஜிப்ரான் வழங்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் தீபாவளிக்கு முதல் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: