Home உலகம் ஜப்பான் பொதுத்தேர்தல்: ஷின்சோ அபே கூட்டணி மீண்டும் வெற்றி!

ஜப்பான் பொதுத்தேர்தல்: ஷின்சோ அபே கூட்டணி மீண்டும் வெற்றி!

913
0
SHARE
Ad

Japanese Prime Minister Shinzo Abe Resignsடோக்கியோ – ஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந் நாட்டின் நடப்புப் பிரதமர் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றிருக்கிறது.

மொத்தமுள்ள 465 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி 312 இடங்களை பெற்றிருக்கிறது.

மூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளதால், சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. ஷின்சோ அபே மீண்டும் பிரதமராவது உறுதி என அனைத்துலக ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

தற்போது ஜப்பானில் கடும் சூறாவளிக் காற்று வீசி வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நல்லமுறையில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

SelliyalAD-Std